நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு!

Thursday, March 24th, 2016

பெல்ஜியத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து இலங்கையின் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த தகவலை தெரிவித்த அவர்  மேலும் தெரிவித்ததாவது – அடையாளங் காணப்பட்ட பல இடங்களுக்கு தற்போது இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் கட்டுநாயக்க விமான நிலையமும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு தொலைபேசி அழைப்புகளினூடாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சர்வதேசத்தின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் ஏதாவது ஒரு நாட்டிற்கு தீவிரவாதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் போது இலங்கையின் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் இது முன்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்றும் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நடைபாதைக்கு இடையூறாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் மா அதிப...
தேர்தல் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!.
நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக...