நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர் செய்ய இந்திய – இலங்கை அமைச்சர்களுக்கு இடையே அடுத்தவாரம் சந்திப்பு!
Saturday, April 16th, 2022இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியினை சீர் செய்யும் நோக்கில் அடுத்த வாரம் இந்திய – இலங்கை அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த வாரம் வொஷிங்டனில், பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ள அதேவேளை, நிதி அமைச்சர் அலி சப்ரி இந்திய அமைச்சரவை பிரதிநிதிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ‘எக்கனமிக் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர், இந்திய பொருளாதார தலைமை ஆலோசகர் மற்றும் பொருளாதாரதுறை செயலாளர் ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகவுள்ளதென நேற்றுத் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மூவின மக்களும் வாழும் மாகாணம் என்பதால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகின்றது - ஈ.பி....
டெங்குவை விரட்ட மாற்றுவியூகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!
வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்!
|
|