நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல

இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் இருப்பதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகள் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தனது அமைச்சு சார்ந்த நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வர வேண்டும் என நாம் விரும்புகின்றோம். இது தொடர்பாக இராஜதந்திரிகளுடன் பேசி வருகின்றோம். இலங்கையில் முதலீடு பெருக வேண்டுமானால் சட்டப்படியான ஆட்சி நடைபெற வேண்டும் என அவர்கள் வற்புறுத்துகின்றார்கள்.இது எதார்த்தமானது. 19-வது அரசியல் யாப்பு திருத்தம் வழியாக அனைத்து துறைகளும் சுதந்திரமாக இயங்கக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது ” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
.
Related posts:
|
|