நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, February 24th, 2022

வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதேநேரம் வட மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

குறித்த மாவட்டங்களில் 50 மில்லிலீற்றர் அளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: