நாட்டின் புதிய அரசியலமைப்பை தீர்மானிப்பது முதலமைச்சரல்ல: பிரதமர் !

Saturday, October 8th, 2016

 

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் மற்றும் கட்சிகள் இணைந்து எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய தாம் செயற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அரசியலமைப்பிற்கு அமைவாக புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாண முதலமைச்சர் மாத்திரமின்றி ஏனையவர்களும் பல கருத்துக்களை முன்வைப்பதாகவும் அவ்வாறு கருத்துக்களை வெளியிடாது இருப்பதே சிறந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் தீர்மானிப்பது முதலமைச்சரல்ல எனவும் அரசியலமைப்பு சபை மற்றும் செயற்பாட்டுக் குழுவின் அறிக்கைக்கு அமைய அது தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

ranil-sri-lankan-prime-minister-ranil-wickremesinghe-in-colombo-on-august-13-2015-afp

Related posts: