நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை தக்கவைக்க வேண்டும் – தலைக்கு மேல் தொங்கும் வாளுக்கு இலங்கை தலைவணங்காது – அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை நாம் தக்கவைக்க வேண்டும். அதே நேரத்தில், மிக நீண்ட காலத்திற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம், அவ்வப்போது திருத்தப்பட வேண்டியதும் அவசியம். நாங்கள் அதைச் செய்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதை நாம் செய்வது அழுத்தத்தாலோ அன்றி தலைக்கு மேலாக தொங்கிக்கொண்டிருக்கும் வாள் காரணமாகவோ அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியிலிருந்து வந்த அரசாங்கங்களின் கீழ் முரண்பாடாக இருந்துவந்ததுடன் குறிப்பிட்ட சில நாடுகளுடனான அதன் நடவடிக்கைகள் சில சமயங்களில் கேள்விகள் பலவற்றை எழுப்பியுள்ளன.

இது தொடர்பில் டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எதிர்காலத்தில் பின்பற்றவுள்ள வெளியுறவு கொள்கை பற்றியும் மனித உரிமைகள் விவகாரம் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்டபில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் எங்களால் பேச முடியாது. இது சாத்தியமில்லை, ஏனென்றால் அது எங்கள் சட்டத்தை மீறுவதாகும். ஆனால் ஏனைய கருத்துகள் உள்ளன. எனவே, அவர்களுடன் பேசுவது பயனுள்ளது.

நாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்? ஆனால் நாட்டில் சில விட யங்கள் நடக்கின்றன,

உதாரணமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மறுசீரமைப்பாகும்.. நாம் அதை இரத்து செய்ய முடியாது. நாங்கள் அதை மிகவும் தெளிவுபடுத்தியுள்ளோம். தேசிய பாதுகாப்பு நலன்கள் எமது மனதில் முதன்மையாக வையாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டில் மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான விழிப்புணர்வு முற்றிலும் அவசியம்.

எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை நாம் தக்கவைக்க வேண்டும். அதே நேரத்தில், மிக நீண்ட காலத்திற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம், அவ்வப்போது திருத்தப்பட வேண்டும். அது அந்த வடிவத்தில் நிரந்தரமாக இருக்க விரும்பவில்லை. மாற்றப்பட வேண்டிய சில விதிகள் உள்ளன. நாங்கள் அதைச் செய்கிறோம்.

இதை நாம் செய்வது அழுத்தத்திற்கு பதிலாகவோ அன்றி தலைக்கு மேலாக தொங்கிக்கொண்டிருக்கும்வாள் காரணமாக அல்ல, ஆனால் இது சரியான விட யம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

மிக நீண்ட காலமாக சிறையில் இருந்தவர்கள், முன்னாள் புலிகள், அவர்களில் சிலரை மீண்டும் சமூகத்தில் விடுவிக்க முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும். அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

எனவே அவர்களின் பாதுகாப்பை தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செய்ய முடியுமா என்பவை நாம் களத்தில் செய்யும் மாற்றங்கள்.

தன்னிச்சையாக மற்றும் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இது மேல்-கீழ் அணுகுமுறையாக இருக்காது.

நாங்கள் இப்போது சகல மட்டத்திலும் மக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்துகிறோம். நாங்கள் ஆரம்பித்த நல்லிணக்க செயல்முறைகளை அது செழுமையாக்குகிறது என்று நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: