நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Wednesday, April 6th, 2022

நாட்டின் பல பாகங்களில், இன்றையதினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும். அம்பாறை மாவட்டத்திலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாட்டின் பெரும்பாலான பாகங்களில், மாலை வேளையில், மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே, காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

இதேவேளை சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை அது இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று (06ஆம் திகதி) வெலிப்பன்ன, மொரகல, வெத்தாகல, தொலேகந்த, பள்ளேபெத்த, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் மஹிராவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுத்திருந்தது.

000

Related posts: