நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Saturday, December 3rd, 2022வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
எனவே, இடியுடன் கூடிய மழை காலநிலை நிலவும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு இளைஞர்கள் இடமளிக்கக் கூடாது - பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர் ஸ்...
அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி...
மதுபானசாலையின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டம்!
|
|