நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!
Tuesday, November 23rd, 2021நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அணியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கம் - விளையா...
ஜுலை 16,17,19 இல் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைதரும் - நிதி செலுத்தப்பட்டுவிட்டதாக துறைசார்...
செலவின சட்டமூலம் இன்று நிறைவேறுமாயின் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் - பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!
|
|