நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 21st, 2021

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதற்கிடையில், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்து.

Related posts:

தேர்தல் செலவுகளை பத்து பில்லியனிற்குள் கட்டுப்படுத்துவதற்கான முயற்சி - மகிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
விரைவில் 25 ஆயிரம் பெண் தொழில் முனைவோர்களை கொண்ட கிராமப்புற வர்த்தக வலையமைப்பு உருவாக்க நடவடிக்கை - ...
இலங்கையில் இராணுவ ஆட்சி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் க...