நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் – திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, April 14th, 2020

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மாலையில் அல்லது இரவில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இடி மின்னல்களின் போது முன்கூட்டியே சேதப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் என்ற அடிப்படையில் இன்று ஆணையிறவு, வண்ணான்குளம், மட்டுவில் ஆகிய இடங்களில் பகல் 12.11 அளவில் சூரிய உச்சம் இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: