நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Monday, September 11th, 2023

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 63 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேநேரம் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

மேல் மாகாணத்தில் 30,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடம் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 20 வீதமானோர் பாடசாலை மாணவர்கள் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவும், வாரம் ஒருமுறையாவது துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மைய நாட்களாக பெய்து வரும் மழையினால் பாடசாலை வளாகம் மற்றும் சுற்றுப் புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: