நாட்டின் நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினம் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் கோரிக்கை!

தற்போது நாட்டிலுள்ள நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினமான விடயம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடு ஸ்திரநிலையில் இல்லாவிட்டால் பொருளாதார சவால்களை வெற்றி கொள்வது கடினம் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்நேரத்தில் கட்சி அரசியல் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தாது, நாடு என்ற எண்ணத்தை வளர்த்து நாட்டை மீள கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
டொலர் இருப்பை மேம்படுத்துவதே முதலில் செய்ய வேண்டிய காரியமாகும். அதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை பெரும் சக்தியாக அமையும்.
மேலும் இறக்குமதிகளை கட்டுப்படுத்தி டொலர் மூலமான செலவீனங்களை மட்டுப்படுத்துவது மற்றுமொரு விடயமாகும்.
இதன்மூலம் வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்துகின்ற வல்லமை ஏற்படும். இதற்கு அரசாங்கம் மட்டுமல்லாமல் பொது மக்களும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|