நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல – அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!
Saturday, June 18th, 2022நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி நாட்டுக்கு அவசியம் என்பது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார்.
பல்லினங்களை கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி முறை இருக்க வேண்டும் என்பது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களின் நிலைப்பாடு என அவர்கள் கூறினார்கள்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கக் கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடு. நானும் அந்த நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றேன்.
அத்துடன் ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நாட்டின் தலைவர்.
அவரை தெரிவு செய்வது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரா அல்லது 2 கோடியே 25 லட்சம் பேரா என்பதை நாட்டு மக்களுக்கு முடிவு செய்ய முடியும்.
நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல என்பதே எனது நிலைப்பாடு எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|