நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, January 16th, 2022

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே மாகாணசபைகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தேர்தல் தாமதாவது இதுமுதல்தடவையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்கள் நடைபெற்றால் மக்கள் பல கேள்விகளை கேட்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் நாட்டில் ஸ்திரதன்மையை உறுதி செய்யும் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: