நாட்டின் சீரற்ற காலநிலை: 20 பேர் உயிரிழப்பு  !

Saturday, May 26th, 2018

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இருவர் காணாமல் போயியுள்ளதாகவும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போதுள்ள மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 40,017 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 153,700 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட 14,437 குடும்பங்களை சேர்ந்த 55,553 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 105 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 4708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.