நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, August 22nd, 2021

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, ஊவா, வடக்கு, வட மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுமெனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

Related posts: