நாட்டின் சில பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

நாட்டின் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குறித்த மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்றைய விடுமுறை தினத்திற்கு பதிலாக, எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜனவரியில் நல்லிணக்க வாரம்!
சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்’!
அரச நிறுவனங்கள் - பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அவதானம்!
|
|