நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் – ஞானசார தேரர்!

Monday, June 24th, 2019

நாட்டில் ஒரு சட்டம் மாத்திரமே செயற்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதனை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலவந்தம் என்றால் என்ன? இதற்கு நாம் அடிபணிய வேண்டுமா? ஆட்சியாளர்கள் அணி பணிந்ததற்கு நாங்கள் அப்படி மாற வேண்டியதில்லை. ஒப்பந்தம் காரணமாக மாலைத்தீவின் அனைத்து தீவுகளும் கட்டாருக்கு சொந்தமாகியது.

கட்டார் என்பது வஹாப்வாதம் உலகம் முழுவதும் பரவுவதற்கு பாரிய பணம் செலவிட்ட நாடாகும். இதனால் இவை உடடியாக ஆட்சிக்கு கீழ்ப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாத்தண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts: