நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆளணி, பௌதிகவளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர்!

நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆளணி மற்றும் பௌதிகவளங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி நாகொட றோயல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் உள்ள பத்தாயிரத்து 161 பாடசாலைகளில் ஏழாயிரம் கல்விக்கூடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகிறது. ஜிசிஈ சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களில் 50 சதவீதமானவர்கள் சித்தி பெறத் தவறுகிறார்கள். இதற்கு தீர்வாக தொழிற்சந்தையை இலக்காக வைத்து 26 புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுமென பிரதமர் தெரிவித்தார்.
எதுவித குறைபாடுகள் இருந்தாலும் பாடசாலைகளில் பரிசளிப்பு விழாக்கள் தவறாமல் நடைபெற வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் ஊக்கம் பெறுகின்றனர் . சமகாலத்தில் பயிற்சிப் பெற்ற ஆசியர்கள், அனுபவம் வாய்ந்த அதிபர்கள் ஆகியோருக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதன் காரணமாக பிள்ளைகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இதற்கு தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|