நாட்டின் கடன் பளு அதிகரிக்காது – ஹர்ஷ டி சில்வா!

Sunday, April 29th, 2018

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைவதால் வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகரிக்கும் என வெளியாகிய தகவல்கள் உண்மையற்றவை என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆகவே அரசாங்கம் இதனை ஏற்று விரைவில் தேர்தலை நடத்தி, மீண்டும் நாட்டை கட்டி எழுப்பக் கூடிய தரப்பினருக்கு கையளிக்க வேண்டியதன் அவசியம் இதனூடாக வெளிப்படுதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: