நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற தாயார் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் விவாதிக்கப்படவில்லை என்றாலும் இது குறித்து பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம் முன்னர் பெறப்பட்ட பெரும்பான்மையான கடன்களை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியை சுமார் ஆறு மாதங்களுக்குள் சமாளிக்க முடியும் என நம்புவதாக ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த மாத இறுதிக்குள் கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!
எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு?
இலங்கையில் ஒரே தடவையில் 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!
|
|