நாட்டின் எழுத்தறிவு வீதத்தை 100% நோக்கி உயர்த்துவதுடன் அதற்கு அப்பாலும் சென்று புதுமைகள் படைக்கவேண்டும் என்பதே எனது இலட்சியம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

இன்று உலக எழுத்தறிவு நாள். தற்போது 91% ஆக உள்ள நமது நாட்டின் எழுத்தறிவு வீதத்தை 100% நோக்கி உயர்த்துவதற்கு எமது இலவசக்கல்வி முறைமை வாய்ப்பை அளித்திருக்கின்றது என்று நாம் பெருமையுடன் சொல்ல முடியும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் எனது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை அறிக்கையை முழுமையாகச் செயற்படுத்துவதன் மூலம் எழுத்தறிவுக்கு அப்பாலும் சென்று – எமது எதிர்கால சந்ததிகளிடத்தில் புதுமை, திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பவற்றையும் வளர்த்தெடுப்பதே எனது நோக்காக உள்ளது.
தனித்தனியான அறிவார்ந்த குடிமகனையும் குடிமகளையும் உருவாக்குவதன் மூலம் – அறிவொளி பெற்றதாக எமது ஒட்டுமொத்த சமூகத்தையும் உருவாக்கவதே எனது இலட்சியம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு அதிபர்கள் சங்கம் கோரிக்கை!
தொழில்வாய்ப்பில் மோசடி: பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
சிறுவர்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்று - சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!
|
|