நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா அதிரடி அறிவிப்பு!

Tuesday, March 29th, 2022

நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தும் என கிரெம்ளின் பேச்சாளர்  டிமிட்ரி பெஸ்கொவ் தெரிவித்துள்ளார்

உக்ரைன் யுத்தம் காரணமாக ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தாது ஆனால் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் பயன்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இராணுவ நடவடிக்கையின் முடிவு அணுவாயுதங்களை பயன்படுத்துவதை தீர்மானிக்காது என தெரிவித்துள்ள பெஸ்கொவ் எங்கள் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் அதனை பயன்படுத்துவோம் என்ற தெளிவான பாதுகாப்பு கருத்தினை கொண்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும்போது நாங்கள் நிச்சயமாக அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ரஸ்ய ஜனாதிபதியை கசாப்புக்கடைக்காரன் என வர்ணித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஸ்ய பேச்சாளர் இது அச்சம் தரும் கருத்து அவமானப்படுத்தும் கருத்தும் கூட என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: