நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வு முன்னெடுப்பு!

Tuesday, June 14th, 2022

நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் நாயகம் சுலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்களுக்கு இடைப்பட்ட 3 வருட காலப்பகுதியில் பெறப்பட்ட அரச கடன்கள் தொடர்பில் இந்த விசேட கணக்காய்வில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட கணக்காய்வு அறிக்கையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: