நாட்டின் அபிவிருத்திக்கு உதவித் தொகையை அதிகரித்தது இந்தியா!

இலங்கையின் அபிவிருத்திக்கான இந்திய உதவி அர்ப்பணிப்புக்களின் தற்போதைய பெறுமதியானது 2.6 பில்லியன் டொலர்களாக ( சுமார் நாற்பதாயிரம் கோடிகள் ரூபா) காணப்படுவதாக இலங்கைக்கான இந்தியத்தூதுவர் தரண்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
இவற்றில் 435 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியங்களாக வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினம் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின வைபவத்தில் உரையாற்றிய போதே, இந்தியத்தூதுவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற கொள்கைக்கு அமைவாக, தொடர்ந்தும் ஸ்ரீலங்கா இந்தியாவின் முக்கிய அங்கமாக இருந்து வருவதாக இலங்கைக்கான இந்தியத்தூதுவர் தரண் ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடமேறி இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்தமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்ட இந்தியத் தூதுவர்,
உலகின் மிக வேகமாக வளர்ச்சி கண்டுவரும் மிகப்பெரிய பொருளாதார வல்லரசிற்கு அருகாமையில் இருக்கின்ற அனுகூலத்தை ஸ்ரீலங்காவின் வியாபார ஸ்தானங்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
ஸ்ரீலங்காவில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் இதுவரையில் 43 ஆயிரத்து 500 வீடுகள் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|