நாடு முழுவதும் வரண்ட வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!
Monday, January 7th, 2019நாடு முழுவதும் வரண்ட வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் இரவு மற்றும் காலையில் குளிரான நிலைமை தொடர்ந்து நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
Related posts:
நாடுமுழுதும் 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள்!
வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்தாளமுக்கம் - கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை அ...
|
|