நாடு முழுவதும் மூன்று வகையான தொற்று நோய் – சுகாதார அமைச்சு!
Saturday, March 25th, 2017
நாடு முழுவதும் தற்போது டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய்க்கு இணையானதொரு வைரஸ் போன்ற மூன்று வகையான தொற்று நோய் தாக்கங்கள் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
குறிப்பாக சிறுவர்களுக்கு குறித்த நோய்கள் விரைவில் பரவக் கூடும் எனசுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இதேவேளை, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோய்களுக்கான மருந்து வகைகள் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வானூர்தி மூலம் இந்த மருந்து வகைகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தொற்று நோய்களுக்கான சிகிச்சை முறையையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த மருந்து வகைகள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தொற்று நோய்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு, தற்போது தம்மிடம் உள்ள மருந்து மற்றும் உபகரணங்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|