நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை: 3 ஆயிரதத்திற்கும் அதிகமானோர்கைது – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சில குற்றங்களின் அடிப்படையில் 3 ஆயிரத்து 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கியுடன் 11 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 638 பேரும், போதைப்பொருட்கள் தொடர்பில் ஆயிரத்து 350 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள்  15 ஆயிரத்து 292 பேர் உட்படுத்தப்பட்டுடிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: