நாடு முழுவதும் ஊடரங்கு : 16 ஆயிரத்து 124 பேர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு!

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக அரசாங்கத்தால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மீறிய 16 ஆயிரத்து 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இன்று மதியம் 12 மணிவரை 4 ஆயிரத்து 064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தினை மீறிய 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 73 வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏ9 வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் அனுமதியளிக்கப்படாது - தொழில...
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் - சட்டமா அ...
|
|