நாடு முழுவதும் உள்ள 120 பாடசாலைகளின் சுகாதார ஆரோக்கியத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவி!

Friday, January 29th, 2021

நாடு முழுவதும் உள்ள 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை அமைத்து மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அமெரிக்கா உதவுவதற்கான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வலய மற்றும் மாகாண கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

கொரோனாவுக்கு எதிரான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான கல்வி அமைச்சின் பரிந்துரைகளை இந்த சுகாதார அறைகள் ஊக்குவிப்பதுடன், படுக்கைகள், மெத்தைகள், முதலுதவி உபகரணங்கள், நகர்த்தக்கூடிய மறைப்பு திரைகள் மற்றும் நீர் விநியோப்பான்கள் ஆகியவற்றை இவை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேவைப்படும் பட்சத்தில் இந்த அறைகள் மாணவர்களுக்கான தனிமை மற்றும் தொடர்புடைய கவனிப்பையும் வழங்கும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், கண்டி, மொனராகலை, மற்றும் கம்பஹாவில் அமைந்துள்ள இந்த சுகாதார அறைகள் கொவிட் தொற்றுநோய் பரவல் முடிவடைந்த பின்னரும் கூட மாணவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: