நாடு முழுவதும் இன்றுமுதல் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் விசேட ஆய்வு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
Wednesday, March 31st, 2021மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்துமுதல் ஆறு உயிர்கள் வரை இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மோட்டார் சைக்கிள் ஆய்வு நடவடிக்கை இன்றுமுதல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது சோதனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் தரம் மற்றும் அவற்றின் இயங்கும் நிலை ஆராயப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இநநிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களால் மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் தற்போது சுமார் 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 56% மோட்டார் சைக்கிள்கள் என்று குறிப்பிடட ஊடகப் பேச்சாளர், பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 16% ஆகும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|