நாடு முழுவதும் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் மின்சார சபையின் பணியாளர்கள்!

Tuesday, March 23rd, 2021

இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சங்கப் பணியாளர்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபைக்குள் சுமார் 3,000 பணியாளர்களை உள்ளீர்ப்பதற்கு எதிராகவே இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பு  நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மின்சார சபையின் இந்த செயற்பாடு பணியாளர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தலைவர் ஏஜி ஜெயலால் தெரிவித்துள்ளார்.

Related posts: