நாடு முழுவதிலும் பொலிஸாரை உஷார் நிலையில் இருக்குமாறு அவசர உத்தரவு!
Friday, October 14th, 2016நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் நேற்று மாலை 6 மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
எந்தவொரு அவசரமான நிலைமையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயராக இருக்கும் வகையில் ஜனாதிபதியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்திற்குள் காணப்படும் அரசியல் போராட்டமே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|