நாடு முழுமையாக முடக்கப்படாது – பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, August 13th, 2021

நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டை முடக்குவது தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனிடையே நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டை முடக்குவது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் – 19 பரவல் செயலணி உட்பட மேலும் சில தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனனர்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

000

Related posts: