நாடு முடக்கப்படும் என்ற செய்தியில் எந்த உண்மையும் கிடையாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021

நாட்டினை 14 நாட்களுக்கு முடக்கவுள்ளதாக வெளியான செய்தியை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.

அதேநேரம் இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 01 ஆம் திகதிமுதல் 14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமூக ஊடகங்களில் பரவும் தவறான கருத்துக்களை கண்டு மக்கள் ஏமாற்றமடையக் கூடாது எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: