நாடு பொருளாதார நெருக்கடியில் !– ஜனாதிபதி

Wednesday, August 3rd, 2016

பல ஆண்டுகளாக நாட்டில் உரிய பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படாமையால் பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

ஆட்சியாளர்களின் பிழையான பொருளாதார கொள்கைகளின் விளைவுகளினால் மக்கள் அவதியுறுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 17வது பொருளாதார மாநாடு நேற்று(2) கொழும்பில் ஆரம்பமானது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் நாட்டின் பொருளாதரத்தை முன்கொண்டு செல்லவேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். வரிச் செலுத்துவோர் தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாகாத வகையிலும் வரிச்செலுத்தாதவர்களை வரிகளைச் செலுத்தச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.