நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் கிடையாது – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திறப்பற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களின் கல்விக்கான உரிமையை பாதுகாப்பதற்காக, பாடசாலைகள் இயலுமான வரை திறக்க முயற்சி எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர் நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தெந்த மாவட்டங்களில் பாடசாலைகளை திறக்க முடியுமோ, அந்த மாவட்டங்களில் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து பாதுகாப்பு விடயங்கள் குறித்து ஆராய்ந்து, நடைமுறை சாத்தியமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: