நாடு நிலையற்றதாக இருக்கும்போது அதை நிலைநிறுத்த வேண்டும் – ரணில் பதவி விலகமாட்டார் – வெளியானது அறிவிப்பு !

தற்போதைய நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் பதவி விலக முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி விலகினால், அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செய்வதற்கு அரசியலமைப்பில் எந்த ஷரத்தும் இல்லை எனவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
இதேவேளை தாம் பதவி விலகத் தயாராக இருப்பதாக பிரதமரே கூறியதை ஊடகவியலாளர்கள் நினைவுபடுத்தியபோது, ஊடகங்கள் உண்மைகளை தவறாகப் பிரசுரித்தமையால் தாம் ஏமாற்றமடைவதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகங்கள் உண்மைகளைத் தவறாகப் தெரிவித்ததால் நான் ஏமாற்றமடைகிறேன். நீங்கள் அரசியலமைப்பின் 37 ஆவது பிரிவைப் பார்க்க வேண்டும். நாடு நிலையற்றதாக இருக்கும்போது அதை நிலைநிறுத்த வேண்டும் என எழுதப்பட்டுள்ளது” என்றார்
அரச தலைவர் இராஜினாமா செய்தாலும் எதிர்வரும் ஜுலை 13 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்தை தொடர்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|