நாடு நாளை வழமைக்கு திரும்பினாலும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை – தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கத்த சங்கத் தலைவர்!
Sunday, May 10th, 2020இலங்கையில் நாளைமுதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகளை நாளையதினம் பணிகளில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நிலவும் நிலைமையின் கீழ் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்திற்கான சட்டத்திட்டங்கள் வர்த்தமானி ஊடாக வெளியிடப்படவுள்ளது. பின்னர் அது சட்டமாக அறிவிக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து ஆசனங்களில் சரியான தூரத்தின் மூலம் பயணிகளை ஏற்ற வேண்டும். அவ்வாறு பயணிக்கும் போது செலவுகளை சமாளிக்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் எரிபொருளுக்கு நியாயமாக விலை கோரிய போதிலும் அது கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாளையதினம் பணிக்கும் செல்லுவோருக்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|