நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கு  இலவச விமான பயணச் சீட்டுக்கள்!

Saturday, September 24th, 2016

தமிழகத்திலிருந்து 76 ஈழ அகதிகள் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று குழுக்களாக எதிர்வரும் 29 ஆம் திகதி அவர்கள் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

திருச்சியிலிருந்து 41 பேரும், சென்னையிலிருந்து 35 பேரும் நாடு திரும்பவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே தமிழகத்திலிருந்து வருகை தரவுள்ளனர்.

நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான இலவச விமான பயணச் சீட்டுக்கள் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

returned-to-sri-lankan-refugee

Related posts: