நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!
Saturday, September 25th, 2021தொழிலுக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்களுக்கு மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டணம் அறவிடாது இலவசமாக PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதனடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொழிலாளர் நலன்புரி நிதியத்தினூடாக PCR பரிசோதனைக்கான கட்டணத்தை ஒதுக்குமாறும் துறைசார் அமைச்சு, பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களை தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, மிக விரைவில் தங்களின் வீடுகளுக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|