நாடு திரும்பினார் ஜனாதிபதி !

Friday, December 1st, 2017

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென் கொரியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இலங்கைக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்பின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு தென் கொரிய ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவருக்கு தென் கொரியாவின் கௌரவ பிரஜா உரிமையும் வழங்கப்பட்டது.இந்த நிலையில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு ஹொங்கொங் வழியாக ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பியுள்ளார்.

Related posts: