நாடு திரும்பினர் ஜனாதிபதி !

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று (16ஆம் திகதி) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
ஆசிய நாகரிகங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி சீனாவிற்கு சென்றிருந்தார். சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தலைமையில் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம் மாநாட்டில் 47 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த மாநாட்டின்போது சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் மற்றும் சீன பிரதமர் லீ குவாங்க் உள்ளிட்டோரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலின் மத்தியில் பாதுகாப்புப் பிரிவினரின் நடவடிக்கைககளுக்காக 260 கோடி ரூபா நன்கொடையை சீனா வழங்கியுள்ளது.
Related posts:
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விற்கப்படுவதில்லை: மக்கள் சிரமம்!
விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பொது மக்களுக்கு பொ...
ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி - சவுதி அரசாங்கம் அறிவிப்பு!
|
|