நாடு தழுவிய ரீதியில் நெல் இருப்புக்கள் கணக்கிடப்பட வேண்டும் – அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, May 26th, 2020

நாட்டின் சில பகுதிகளில் அரிசி பற்றாக்குறை நிலவுவதற்கு காரணம் அரிசி ஆலை உரிமையாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என அனைத்து இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு அரிசியை மொத்தமாக சந்தைப்படுத்துவதாகவும் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலைமைய தவிர்ப்பதற்காக அரசாங்கத்தால் நாடு தழுவிய அனைத்து நெல் இருப்புக்களை கணக்கிட வேண்டும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர், ­மேலும் தெரிவித்துள்ளார்.

அரிசி மற்றும் நெற் பங்குகளை மறைப்பவர்கள், சந்தையில் விற்கப்படும் அரிசியின் தொகையின் அளவை குறைப்பவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அமைச்சர் அசேலபண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: