நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, August 27th, 2021

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் கொரோனா நிதிக்காக அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே சேவைக்கு அழைத்துள்ளமையினால் மேலதிக கொடுப்பனவுகள் போன்ற கொடுப்பனவுகளை வழங்குவதில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: