நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படமாட்டாது – போக்குவரத்து துறை அமைச்சு அறிவிப்பு!.
Sunday, May 10th, 2020நாளையதினம் இயல்பு நிலைக்கு நாடு திரும்பினாலும் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளப் போவதில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளைமுதல் தளர்த்தப்படும் என்று அறிவிகப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அவசியமற்ற முறையில் பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமையவே இந்த நடவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அமைச்சு அரச மற்றும் தனியார் ஊழியர்களின் போக்குவரத்துக்கள் மட்டும் இடம்பெற்றும் என்றும் அறிவித்துள்ளது.
அத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் புகையிரதம் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூர இடைவெளி கடைபிடித்தல், வீதிகளில் எச்சில் துப்புவதனை தவிர்த்தல், தும்மும் போது அல்லது இருமலின் போது முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பேருந்து மற்றும் ரயில்களில் உள்ள கைப்பிடிகள் பிடிப்பதனை முடிந்தளவு தவிர்த்தல், அப்படி பிடித்தால் உடனடியாக கைகளை கழுவுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே புகையிரத சட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புகையிரதங்களில் எச்சில் துப்புதல் அல்லது புகையிரத வீதிகளில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|