நாடுமுழுவதும் சுழற்சி முறையில் மின்தடை: மின்சார சபை விடுத்துள்ளஅவசர அறிவிப்பு!

Wednesday, March 20th, 2019

நுரைச்சோலை மின் நிலையத்தின் 2 ஆவது மின்பிறப்பாக்கி பழுதடைந்துள்ளதால் இவ் மின்பிறப்பாக்கி சீர்செய்யப்படும்வரை நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப் படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் வடக்கு மாகாணத்தில் பகல் வேளைகளில் சுமார் நான்கு தொடக்கம் ஐந்து மணித்தியாலங்களும், இரவில் ஒன்று முதல், இரண்டு மணித்தியாலங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று வடக்கு மாகாண மின் வழங்கல் சேவை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இந்த சுழற்சி முறைமின் வெட்டு நிலமை சுமார் 3 நாள்கள் வரை நீடிக்கலாம் என்றும் மின் தடை ஏற்படும் இடங்களில் மின் வெட்டு நடைமுறை நேரம், மாற்றம் அடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: