நாடுமுழுவதும் சிறப்பாக இடம் பெற்ற ஈஸ்டர் திருப்பலி நிகழ்வகள்!

Sunday, April 4th, 2021

யேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி  நாடுமுழுவதும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.15 மணிக்கு குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்லியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது மக்கள் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர். திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப் படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றதோடு, தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: