நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிக்கும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, August 5th, 2022

தைவான் விவகாரத்தில் சீனாவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

சீனா சொந்தம் கொண்டாடி வரும் தைவானுக்கு சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) சென்றார்.

இதன்போது, தைவான் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து நான்சி பெலோசி கலந்துரையாடினர்.

இந்த நிலையில், இதுதொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது, இலங்கைக்கான அமெரிக்க தூதர் கி சென்ஹாங் என்னை சந்தித்தார்.

அவரிடம், ‘ஒரே சீனா’ கொள்கையையும், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிப்பதாக தெரிவித்தேன்.

தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் தூண்டும்வகையிலான செயல்பாடுகளை நாடுகள் தவிர்க்க வேண்டும்.

பரஸ்பர மரியாதையும், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் அமைதியான ஒத்துழைப்புக்கு முக்கியமான அடித்தளம் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: